தேனியில் அடுத்தடுத்து வெட்டப்படும் சாலையோர மரங்கள்: தடுத்து நிறுத்த போராடும் தன்னார்வலர்கள்

தேனியில் நூற்றாண்டு பழமையான சாலையோர மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதற்கு கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது

தேனியில் அடுத்தடுத்து வெட்டப்படும் சாலையோர மரங்கள்: தடுத்து நிறுத்த போராடும் தன்னார்வலர்கள்

தேனி: தேனியில் நூற்றாண்டு பழமையான சாலையோர மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதற்கு கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையின் இரண்டு பக்கமும் பழமையான மரங்கள் அதிகம் உள்ளன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத் துறையினர் இவற்றை வெட்டத் தொடங்கினர். நேற்று 5 மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர். கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜ் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் புரட்சித் தமிழர் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வீரகுரு தலைமை வகித்தார்.