உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்

நடப்பாண்டுக்கான இரண்டாம் சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது

உதகை தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்

உதகை: நடப்பாண்டுக்கான இரண்டாம் சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

மலைகளின் அரசியான உதகைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில், ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும்நடைபெறும்.‌ நடப்பாண்டுக்கான இரண்டாம் சீசனுக்கு 60 ரகங்களில், 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி, உதகை தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கியது.