வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் தெப்பக்குளத்துக்கு நீர் வருவது நிறுத்தம்: நிறம் மாறிய தண்ணீர்!

மதுரை வைகை ஆற்றில் இருந்து சமீப காலமாக வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், நீண்ட காலமாக தேங்கி நிற்பதால் தெப்பக்குளம் தண்ணீர் நிறம்மாறி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. 

வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் தெப்பக்குளத்துக்கு நீர் வருவது நிறுத்தம்: நிறம் மாறிய தண்ணீர்!

மதுரை: மதுரை வைகை ஆற்றில் இருந்து சமீப காலமாக வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், நீண்ட காலமாக தேங்கி நிற்பதால் தெப்பக்குளம் தண்ணீர் நிறம் மாறி பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், தற்போது உள்ளூர் மக்களுக்கு முக்கிய பொழுதுப்போக்கு இடமாக திகழ்கிறது. கடந்த காலத்தில் ஏராளமான சினிமா திரைப்படங்கள் எடுக்கப்பட்டதால் இந்த தெப்பக்குளம் சுற்றுலாத் தலமாக புகழ்பெறத்தொடங்கியது. இடைப்பட்ட காலத்தில் வரத்து இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டிற்கு முன் வரை இந்த தெப்பக்குளம் நிரந்தரமாக வறட்சிக்கு இலக்கானது. இளைஞர்கள், மாணவர்கள் விளையாடும் மைதானமாகவும், ஆடு, மாடுகளுடைய மேய்ச்சல் நிலமாகவும் மாறியது. அதனால், இந்த தெப்பக்குளத்தின் அழகும், அதன் பராம்பரிய தோற்றமும் மாறியது.