நிதிப் பகிர்வில் கூட்டாட்சி
மத்திய அரசுக்கே அதிக நிதிச்சுமைகள் இருக்கும்; ஆகையால், நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கே அதிகப் பங்கு தேவைப்படும் என்கிறார் இராம. சீனுவாசன்.
இராம.சீனுவாசன் எழுதிய ‘நிதிக்குழுச் சவால்கள்’ கட்டுரையின் தொடர்ச்சியான விவாதம்:
மத்திய அரசுக்கே அதிக நிதிச்சுமைகள் இருக்கும்; ஆகையால், நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கே அதிகப் பங்கு தேவைப்படும் என்கிறார் இராம. சீனுவாசன். கூட்டாட்சித் தத்துவத்தை இந்தியா எந்த அளவுக்கு வலியுறுத்துகிறதோ அதே அளவுக்குக் கூட்டாட்சி நிதிப் பகிர்வையும் நமது அரசியலமைப்புச் சட்டம் மூலம் வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டாட்சி நிதிப் பகிர்வை உறுதிப்படுத்துவதற்கு அந்தச் சட்டத்தின் 280-வது பிரிவு வழிவகுக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த நேரடி அதிகாரத்தில் அமைக்கப்பட்டதுதான் தேசிய நிதி ஆணையம். ஆனால், கூட்டாட்சி நிதிப் பகிர்வின் நோக்கங்கள் நடப்பில் நேர் எதிராகச் செயல்படுத்தப்படுவதுதான் துயரம்.