படிக்கும் வயதில் நடிக்கலாமா?

ஒரு நடிகை, நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும்போது அவர் திருமணம் செய்துகொண்டால் அதுவே அவர் நாயகியாக நடித்த கடைசிப் படமாக அமைந்துவிடுகிறது.

படிக்கும் வயதில் நடிக்கலாமா?

“நீ பார்க்க த்ரிஷா மாதிரி இருக்க, சினிமாவில் நடிக்க அத்தனை அம்சங்களும் உங்கிட்ட இருக்கு” என்று அழகிய பெண்களுக்குப் பலரிடமிருந்தும் இதுபோன்ற பாராட்டு கிடைக்கும். பள்ளிப் பருவ காலம் அதாவது தமிழ் இலக்கியப்படி மங்கை, மடந்தை பருவத்தில் இருக்கும்போதே தன் அழகுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைக் கேட்டு எந்தப் பெண்ணும் பூரிப்படைவாள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

இது புகழ்ச்சியுடன் நின்று விடாமல், சிலருக்கு நடிகையாகும் கனவும் முளைத்துவிடுவது உண்மை. பல சமயங்களில் அந்தப்பெண்ணைவிட அவளின் அம்மாவுக்குத்தான் தன் பெண்ணை வெள்ளித்திரையில் பிரம்மாண்டமாய் காண ஆசை ஊறிப்போய்விடுகிறது.