அழகுப் பதுமைகளா பெண்கள்?

ஒரு பெண் தன் திறமையால் காவல்துறை அதிகாரியாகப் பதவியேற்றாலும் அவளுடைய அழகை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பார்க்கும் மனப்பான்மைதான் அதிகமாக இருக்கிறது

அழகுப் பதுமைகளா பெண்கள்?

ஒரு பெண் தன் திறமையால் காவல்துறை அதிகாரியாகப் பதவியேற்றாலும் அவளுடைய அழகை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பார்க்கும் மனப்பான்மைதான் அதிகமாக இருக்கிறது. அதற்குச் சமீபத்திய உதாரணம் கேரளாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மெரின் ஜோசப்புக்கு நேர்ந்த அனுபவம்.

2012-ம் ஆண்டு தன் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மெரின், தான் பயிற்சி பெற்ற பிரிவின் இளம் ஐ.பி.எஸ். பயிற்சியாளர். தற்போது பயிற்சி அதிகாரியாக இருக்கும் மெரின் ஜோசப், வருகிற ஜனவரியில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பதவியேற்க இருக்கிறார். இவருக்குச் சிறு வயதில் இருந்தே ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் கனவு.