ஹஜ் பயணத்தில் ‘செல்பி’: பெருகும் ஆதரவும் சர்ச்சைகளும்: இணையத்தில் விவாதம்
"நான் எங்கு சென்றாலும், புகைப்படம் எடுப்பேன். தற்போது அனைவரிடமும் சிறிய கேமராக்கள் உள்ளன. இவை முழு காட்சியையும் பதிவு செய்கின்றன"
ஹஜ் பயணத்தின் போது இஸ்லா மியர்கள் புனிதமாகக் கருதும் பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பது பரவலான ஆதரவையும், அதே அளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.
மெக்காவிலுள்ள காபாவைச் சுற்றியும், அங்கு நடைபெறும் பல்வேறு மத சம்பிரதாய நிகழ்வுகளையும் தங்களுடன் சேர்த்து ‘செல்பி’ (தங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்) எடுத்து அதனை சமூக வலைத் தளங்களில் ஏராளமான ஹஜ் பயணிகள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஹஜ் பயண செல்பிகள் பெரும் பிரபல்யம் அடைந்துள்ளன.