சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?

"கோயிலுனுள் வந்து யார் வேண்டும் ஆனாலும் தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கோயில் ஆகம விதிகளைக் கடைபிடித்தாக வேண்டும்.

சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குத் தொடர்பாக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்திச் சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் சில தினங்களாக நடராஜர் கோயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமையும் போராட்டம் நடந்தது.

விவகாரம் பெரிதான நிலையில், கோயிலுக்குள் தேவாரம் பாடக் கூடாதா எனப் பொது தீட்சிதர்களில் ஒருவரான சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில், “யார் வேண்டுமானாலும் கோயிலுனுள் வந்து தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாகக் கோயில் கர்ப்பக் கிரகத்தினுள் ஆகம விதிகள் எனச் சிலவற்றைக் கடைபிடித்தாக வேண்டும்.