விவாதக் களம்: பணமதிப்பு நீக்கம் ஓராண்டு; உங்கள் பார்வையில்
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, திடீரென இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார் என்ற அறிவிப்பு பிரேக்கிங் நியூஸாக சென்றபோது யாரும் அறிந்திருக்கவில்லை அப்படி ஓர் அறிவிப்பு வரும் என்று.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, திடீரென இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார் என்ற அறிவிப்பு பிரேக்கிங் நியூஸாக சென்றபோது யாரும் அறிந்திருக்கவில்லை அப்படி ஓர் அறிவிப்பு வரும் என்று. சற்று நேரத்தில் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நிமிடம் முதல் உங்கள் கைகளில் இருக்கும் பழைய ரூ.500, ரூ.1000 எல்லாம் செல்லாக்காசு என்றார். அதுதான் பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி ’ஹார்ட் பிரேக்கிங்’ நியூஸாக இருந்தது.
அடுத்த நாள் முதல் வங்கிகளுக்குக் கூட்டம் அலைமோதியது. தியேட்டர், ரயில் நிலைய வரிசையைவிட ஏடிஎம் வாசல்களில் மக்கள் வரிசை கட்டி நின்றிருந்தனர். புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டாலும் அதற்கு சில்லறை பெற வேண்டுமே! சில்லறை தான் மாற்றமுடியவில்லை, அட செல்ஃபியாவது போடுவோமே என்று ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகளை கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி போட்டவர்கள் ஏராளம்.