வெளுத்துவாங்கும் வடகிழக்கு பருவமழை: உங்கள் பகுதி நிலவரம் என்ன?
சென்னைவாசிகளே இன்றைய மழைக்கு உங்கள் பகுதி எப்படி இருக்கிறது எனத் தெரிவியுங்கள். கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கின்றனவா? குப்பைகள் அகற்றப்பட்டு மழைநீர் வடிய பாதை இருக்கிறதா? மின்சார பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா? பிரச்சினை பகுதிகளில் அரசு இயந்திரங்கள் உடனே சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றனவா? இல்லை எல்லாம் சரியாக இருக்கிறதா! நிறை குறை எதுவாக இருந்தாலும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை - அக்.29) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துவருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழக அரசின் பல்வேறு துறைகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. மாநகராட்சி, பொதுப்பணித் துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை என துறைசார் ஆலோசனைக் கூட்டங்கள் களைகட்டின. 2015 சென்னை பெருவெள்ளம் கற்றுத்தந்த பாடம்தான் என மக்களே பேசிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டங்கள் அமைந்தன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர்கள் பலரும் தெரிவித்தனர்.