பிளாஸ்டிக் குடுவையில் பனங்கிழங்கு விவசாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலரின் வித்தியாச முயற்சி
சாலைகளில் தூக்கி வீசப்பட்ட 2 லிட்டர் நெகிழிக் குடுவைகளைச் சேகரித்து அதில் பனைவிதைகளை விதைத்து 120 நாட்கள் கழித்து பனங்கிழங்கு எடுக்கும் ஓர் வித்தியாசமான முயற்சியை மதுரையைச் சேர்ந்த பசுமை செயற்பாட்டாளர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.
மதுரை: சாலைகளில் தூக்கி வீசப்பட்ட 2 லிட்டர் நெகிழிக் குடுவைகளைச் சேகரித்து அதில் பனைவிதைகளை விதைத்து 120 நாட்கள் கழித்து பனங்கிழங்கு எடுக்கும் ஓர் வித்தியாசமான முயற்சியை மதுரையைச் சேர்ந்த பசுமை செயற்பாட்டாளர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.
சாலையில் வீசப்படும் நெகிழி குடுவைகள் மீது வாகனங்கள் ஏறி நைந்து பூமியில் சென்று மக்காது மண்ணுக்குத் தீங்கு விளைவிக்கிறது. அதைத் தவிர்க்கும் வகையில், மதுரையைச் சேர்ந்த பசுமை செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார், நெகிழி குடுவைகள் மறு சுழற்சிக்கு முறையாகச் செல்லும் முன் பசுமைக்குப் பயன்படுத்திடும் ஓர் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.