செங்கல் சூளைகள் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் புதிய உத்தரவு
செங்கல் சூளைகளுக்கு இடையே 1 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகள், பழத்தோட்டங்களில் இருந்து குறைந்தது 800 மீட்டர் தொலைவில் செங்கல் சூளைகள் இயங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.
சென்னை: செங்கல் சூளைகளுக்கு இடையே 1 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகள், பழத்தோட்டங்களில் இருந்து குறைந்தது 800 மீட்டர் தொலைவில் செங்கல் சூளைகள் இயங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.
இந்த வழிகாட்டுதல்கள், புதிதாக தொடங்கப்படும் செங்கல் சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என கடந்த 2023-ம் ஆண்டு பிப்.14-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது.