மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைமை ஆய்வு செய்யும்: செல்வப்பெருந்தகை தகவல்

ம​காராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து காங்​கிரஸ் தலைமை ஆய்வு மேற்​கொள்​ளும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தெரி​வித்​தார். 

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைமை ஆய்வு செய்யும்: செல்வப்பெருந்தகை தகவல்

சென்னை: ம​காராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து காங்​கிரஸ் தலைமை ஆய்வு மேற்​கொள்​ளும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தெரி​வித்​தார்.

மகாராஷ்டிரா, ஜார்க்​கண்ட் மாநில சட்டப்​பேர​வைத் தேர்​தல்​கள், வயநாடு இடைத்​தேர்தல் பற்றி சென்னை சத்தி​யமூர்த்தி பவனில் தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்​ளது. எங்களது அகில இந்திய காங்​கிரஸ் கமிட்டி பொதுச்​செய​லாளர் பிரி​யங்கா காந்தி 2.5 லட்சம் வாக்​கு​களுக்​கும் அதிக​மாகப் பெற்று முன்னிலை​யில் உள்ளார். அவர் மகத்தான வெற்றி பெறு​வார். மகாராஷ்டிரா​வில் பின்னடைவு ஏற்பட்​டிருக்​கிறது.