தாய்மொழியை விட்டு விலகும் இளம் தலைமுறை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வருத்தம்
இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனை அளிக்கிறது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
இளம் தலைமுறையினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனை அளிக்கிறது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்க்கூடல்-2024 என்ற மாநாடு பல்கலை. வளாகத்தில் நேற்று தொடங்கியது. பேரவைத் தலைவர் செ.துரைசாமி வரவேற்றார். துணைவேந்தர் (பொறுப்பு) க.சங்கர் தலைமை வகித்தார். மாநாட்டின் நோக்கம் குறித்து பேரவைப் பொதுச் செயலாளர் மு.முத்துராமன் பேசினார்.