மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைமை ஆய்வு செய்யும்: செல்வப்பெருந்தகை தகவல்
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை ஆய்வு மேற்கொள்ளும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை ஆய்வு மேற்கொள்ளும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், வயநாடு இடைத்தேர்தல் பற்றி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2.5 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று முன்னிலையில் உள்ளார். அவர் மகத்தான வெற்றி பெறுவார். மகாராஷ்டிராவில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.