மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற தடை

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற தடை

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன், மணி உள்ளிட்ட 258 பேர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை சின்ன உடைப்பு பகுதியில் 350 குடும்பம் வசிக்கின்றன. பெரும்பாலானோர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக எங்கள் நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிட்டு எங்கள் நிலங்களை கையகப்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.