வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியின்  “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது, என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: "வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் ‘எழுச்சி’ எனப் பதிவுசெய்த அவருக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக “Swadeshi Steam” நூலை ஆ.இரா.வேங்கடாசலபதி கொண்டு வந்துள்ள வேளையில், அவரது “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் ‘எழுச்சி’எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள்!" என்று பதிவிட்டுள்ளார்.