ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார்.
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார். அவருக்கு வயது 76. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காய்ச்சல், சளி, மூச்சுதிணறல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 13-ம் தேதி சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.