நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 3-வது நாளாக மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த துடன், பல இடங்களில் பாலங்கள் நீரில் மூழ்கின.
திருநெல்வேலி/தென்காசி/ தூத்துக்குடி: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த துடன், பல இடங்களில் பாலங்கள் நீரில் மூழ்கின.
நெல்லை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய கனமழை நேற்றும் நீடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை 1,377.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 7,813 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 3,485 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைகளில் இருந்து 2,400 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.