டிச. 18 முதல் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம்: ஆவின் அறிவிப்பு
பொதுமக்கள் விரும்பும் வகையில், ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பொதுமக்கள் விரும்பும் வகையில், ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆவின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் உபப்பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.