“நேரில் வந்து நிவாரணம் வழங்கி இருக்கலாம், ஆனால்...” - விஜய் கூறிய காரணம்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினரை வரவழைத்து, அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார்.
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினரை வரவழைத்து, அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை தவெக தொண்டர்கள் செய்யுமாறு விஜய் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 250 குடும்பத்தினரை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்துக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.