மறுசுழற்சி குடிநீர் பாட்டில்களால் நீலகிரியில் உருவாகும் மறுமலர்ச்சி!
பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது மறுசுழற்சி பாட்டில்கள் மூலமாக ரூ.5-க்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வ அமைப்பு தொடங்கியுள்ளது.
குன்னூர்: பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது மறுசுழற்சி பாட்டில்கள் மூலமாக ரூ.5-க்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வ அமைப்பு தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள பர்லியாறு, குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, கெத்தை உட்பட அனைத்து சோதனைச்சாவடிகள் முதல் உதகை வரையிலான நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவுப் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.