ராமேசுவரத்தில் ரூ.52 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

ராமேசுவரத்​தில் அக்னி தீர்த்தம் அசுத்​த​மாவதைத் தடுக்க, ரூ.52.60 கோடி செலவில் அமைக்கப்​பட்​டுள்ள கழிவுநீர் சுத்​தி​கரிப்பு நிலையம் விரை​வில் பயன்​பாட்டுக்கு வரும் என உயர் நீதி​மன்​றத்தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது.

ராமேசுவரத்தில் ரூ.52 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: ராமேசுவரத்​தில் அக்னி தீர்த்தம் அசுத்​த​மாவதைத் தடுக்க, ரூ.52.60 கோடி செலவில் அமைக்கப்​பட்​டுள்ள கழிவுநீர் சுத்​தி​கரிப்பு நிலையம் விரை​வில் பயன்​பாட்டுக்கு வரும் என உயர் நீதி​மன்​றத்தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்​திரன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு: ராமேசுவரம் கோயி​ல் அக்னிதீர்த்​தத்தை மக்கள் புனித​மாகக் கருதுகின்​றனர். ஆனால், அக்னி தீர்த்தம் அருகே ராமேசுவரம் நகராட்​சி​யில் இருந்து வெளிவரும் கழிவுநீர் கடலில் கலக்​கிறது. இதனால் கடல் அசுத்​த​மாகி வருகிறது. இதைத்தடுக்​க​வும், சரி செய்​ய​வும் கோரி அதிகாரி​களுக்கு மனு அளித்​தும் நடவடிக்கை எடுக்க​வில்லை. எனவே, அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர், கடலில் கலப்பதை தடுக்க அதிகாரி​களுக்கு உத்தரவிட வேண்​டும். இவ்வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.