வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் பார் கவுன்சில் தயாரித்துள்ள வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரை: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் பார் கவுன்சில் தயாரித்துள்ள வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார். ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். தேனியில் வழக்கறிஞர் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் மறியல் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.