வார விடுமுறை இல்லை, பல மணிநேர பணி: தவிக்கும்  பயிற்சி மருத்துவர்கள்- குறைகளை தீர்க்குமா ஜிப்மர்?

வாரவிடுமுறை இல்லை. தொடர்ச்சியாக பல மணி நேர பணியால் பயிற்சி மருத்துவர்கள் தவிப்பதுடன் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதாக குமுறுவதால் அவர்களின் குறைகளை ஜிப்மர் தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

வார விடுமுறை இல்லை, பல மணிநேர பணி: தவிக்கும்  பயிற்சி மருத்துவர்கள்- குறைகளை தீர்க்குமா ஜிப்மர்?

புதுச்சேரி: வா ரவிடுமுறை இல்லை. தொடர்ச்சியாக பல மணி நேர பணியால் பயிற்சி மருத்துவர்கள் தவிப்பதுடன் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதாக குமுறுவதால் அவர்களின் குறைகளை ஜிப்மர் தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடித்து வைத்தது.