விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் துணை முதல்வர் ஆய்வு - நீரை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் நீச்சல் குளம் பராமரிக்கப்படுவதில்லை என விழுப்புரத்திற்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் நீச்சல் குளம் பராமரிக்கப்படுவதில்லை என விழுப்புரத்திற்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
இதனையடுத்து மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை முடித்த உதயநிதி இன்று நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீச்சல் குள நீரில் குளோரின் இல்லை என்பதையும் பூச்சிகள் தண்ணீரில் மேய்ந்து கொண்டு இருந்ததையும் பார்த்த உதயநிதி, நீச்சல் குள நிர்வாகியை எச்சரித்தார். மேலும் நீச்சல் குளத்து நீரை ஆய்வுக்கு அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.