ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் டிச.24 வரை சிறையில் அடைப்பு
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் அவரது கருத்துகளை முன்வைத்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த வாரம் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது.