187 வகை தாவரங்கள், 98 வகை பறவைகள், 23 வகை விலங்குகள்... பல்லுயிரிய மரபு தளம் ஆகுமா வெள்ளிமலை கோயில்காடு?

187 வகை தாவரங்கள், 98 வகை பறவைகள், 23 வகை விலங்குகள் நிறைந்த வெள்ளிமலை கோயில்காடு பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

187 வகை தாவரங்கள், 98 வகை பறவைகள், 23 வகை விலங்குகள்... பல்லுயிரிய மரபு தளம் ஆகுமா வெள்ளிமலை கோயில்காடு?

மதுரை: 187 வகை தாவரங்கள், 98 வகை பறவைகள், 23 வகை விலங்குகள் நிறைந்த வெள்ளிமலை கோயில்காடு பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை அருகே வெள்ளிமலை கோயில் காட்டினை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் சங்கீதாவிடம் மதுரை இடையப்பட்டி, தெற்கமூர், சொருகுளிப்பட்டி ஊர் மக்கள் மற்றும் வெள்ளிமலை கோயில்காடு பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் பொறுப்பாளர்கள் வெ. கார்த்திக், முரா. பாரதிதாசன் இன்று மனு வழங்கினர்.