2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லை! - நிர்வாகக் குளறுபடியால் ஸ்தம்பித்து நிற்கும் பாரதியார் பல்கலை.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருக்கிறது. துணைவேந்தர் பொறுப்புக்குழுதான் இப்போது பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருக்கிறது. துணைவேந்தர் பொறுப்புக்குழுதான் இப்போது பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கும், பதிவாளருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லாத தால் பல்கலைக்கழக நிர்வாகம் ஸ்தம்பித்துக் கிடப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 133 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு துணைவேந்தராக இருந்த காளிராஜ் 2022 அக்டோபரில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாததால் கடந்த 2 ஆண்டுகளாக பல்கலைக்கழக நிர்வாகத்தை, துணைவேந்தர் பொறுப்புக்குழு நிர்வகித்து வருகிறது.