20 வகையான பதிவு கட்டணம் உயர்வு: டிடிவி.தினகரன் கண்டனம்
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள் ளதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி
சென்னை: தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள் ளதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து டிடிவி.தினகரன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: பத்திரப் பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, ஏழை மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும். எனவே, முத்திரைத் தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.