அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: முதல்வரின் தனிச்செயலர் சிகிச்சை பலனின்றி பலி
புதுவை மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ் அரிமா (வயது 34). இவர் முதல்வர் ரங்கசாமியின் உதவி தனி செயலராக பணியாற்றி வருகிறார்
புதுச்சேரி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சிகிச்சையிலிருந்த முதல்வரின் உதவி தனிச்செயலர் இன்று உயிரிழந்தார்.
புதுவை மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ் அரிமா (வயது 34). இவர் முதல்வர் ரங்கசாமியின் உதவி தனி செயலராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் காலாப்பட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து சின்னகாலாப்பட்டு இசிஆர் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்துள்ளார்.