‘அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது’ - இபிஎஸ் பேச்சு

கடந்த ஆட்சியில் அதிமுக நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினர்.

‘அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது’ - இபிஎஸ் பேச்சு

அரியலூர்: கடந்த ஆட்சியில் அதிமுக நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினர்.

அதிமுக கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான, தாமரை எஸ்.ராஜேந்திரனின் மகள் பார்கவியின் திருமணம் இன்று (டிச.6) அரியலூரில் நடைபெற்றது. முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.