அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அமராவதி ஆற்றில் 75,751 கன அடி வெள்ள நீர் சென்றதையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதை திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் நின்று ஆபத்தை உணராமல், மக்கள் வேடிக்கை பார்த்ததுடன் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர்.

அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கரூர்: அமராவதி ஆற்றில் 75,751 கன அடி வெள்ள நீர் சென்றதையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதை திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் நின்று ஆபத்தை உணராமல், மக்கள் வேடிக்கை பார்த்ததுடன் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர்.

கரூர் அருகேயுள்ள பெரிய ஆண்டாங்கோவில், அணைப்பாளையம், ஒத்தமாந்துறை ஆகிய பகுதிகளில் அமராவதி ஆற்றில் இன்று (டிச. 14) அதிகளவு தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமராவதி அணையில் நேற்று 36,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சேர்ந்து நேற்று தாராபுரம் தடுப்பணைக்கு 75,000 கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் வந்தது.