அமைந்தகரை சமுதாய நலக்கூட சுவரில் பெரிய ஆலமரம்: எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்து

சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம் (8) வார்டு 108-ல் அமைந்தகரையில் அமைந்துள்ளது சமுதாய நலக்கூடம். மிகவும் பழமையான இந்த சமுதாய நலக்கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அமைந்தகரை சமுதாய நலக்கூட சுவரில் பெரிய ஆலமரம்: எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்து

சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம் (8) வார்டு 108-ல் அமைந்தகரையில் அமைந்துள்ளது சமுதாய நலக்கூடம். மிகவும் பழமையான இந்த சமுதாய நலக்கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் பக்கவாட்டு சுவரின் மையப் பகுதியில் ஆலமரம் ஒன்று வளர்ந்து பெரியதாக நிற்கிறது. இதனால் பக்கவாட்டு சுவர் பெரிதும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்கவோ அல்லது அந்த மரத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய சுற்றுச் சுவர் அமைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அமைந்தகரையை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சமுதாய நலக்கூடத்தின் பக்கவாட்டு சுவரின் மையப் பகுதியில் ஆலமரம் ஒன்று வளர்ந்து பெரிதாக நிற்கிறது. இதனால் பக்கவாட்டு சுவர் வலுவிழந்துள்ளது. அதனால் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயம் இருக்கிறது. சமுதாய நலக்கூடத்தில் ஏதாவது நிகழ்ச்சி நடைபெறும்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தால் விபரீதம் நிகழும் அபாயமும் இருப்பதை மக்கள் பிரதிநிதியும், அதிகாரிகளும் உணர வேண்டும்.