“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர்...” - சீமான் தகவல்
வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் ஆட்சி எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்கும் என திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்
கோத்தகிரி: வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் ஆட்சி, எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்கும் என திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர் என்று அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கோத்தகிரியில் உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.