அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை: விக்னேஷ் சிவன் விளக்கம்

புதுச்சேரி அரசு சொத்து ஒன்றை விலைக்கு கேட்ட சர்ச்சை தொடர்பாக இயக்குநரும், நடிகை நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.

அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை: விக்னேஷ் சிவன் விளக்கம்

சென்னை: புதுச்சேரி அரசு சொத்து ஒன்றை விலைக்கு கேட்ட சர்ச்சை தொடர்பாக இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் ஓட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டார் என்று தகவல் பரவியது. அரசு ஓட்டலை விலைக்கு கேட்டாரா என்று இணையத்தில் பலரும் அவரை கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதை வைத்து பலரும் மீம்ஸ்களை பகிரத் தொடங்கினார்கள்.