“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” - திருமா ஆக்ஷனும் ஆதவ் அர்ஜுனா ரியாக்ஷனும்!
கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் விசிகவுக்கும் தவெகவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவுடனான கூட்டணியில் விசிக இருந்துவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.