ஆந்திராவை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்துக்கு கனமழை அச்சம் நீங்கியது

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆந்திர கரையை நெருங்கும் என்பதால் தமிழகத்துக்கு கனமழை அச்சம் நீங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும். பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து இன்று ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.