முழு கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி: விநாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
மழைநீர் வரத்து அதிகரிப்பால் வியாழக்கிழமை மதியம் விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக, நீர் வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதிருவள்ளூர்: மழைநீர் வரத்து அதிகரிப்பால் வியாழக்கிழமை மதியம் விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக, நீர் வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இந்த ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ஃபெஞ்சல் புயல் காரணமாகவும் தற்போது பெய்துவரும் மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.