ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல் மத்திய சிறைக்கு மாற்றம்
பூந்தமல்லி தனி கிளை சிறையில் கஞ்சா, மொபைல்போன்கள் பறிமுதல் சம்பவம் எதிரொலியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பூந்தமல்லி: பூந்தமல்லி தனி கிளை சிறையில் கஞ்சா, மொபைல் போன்கள் பறிமுதல் சம்பவம் எதிரொலியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தனி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சிறைத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில், 20 கிராம் கஞ்சா, 5 மொபைல் போன்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.