போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா: சிஐடியு அறிவிப்பு

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. 

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா: சிஐடியு அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ''ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பணப்பலன், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அனைத்து துறையின் ஓய்வு பெற்றவர்களும் அகவிலைப்படி உயர்வு பெறும்போது, போக்குவரத்து துறையில் மட்டும் 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுகிறது.