“சனாதன கொள்கைகளை பாதுகாக்க இந்துக்கள் முன்வர வேண்டும்” - அர்ஜுன் சம்பத் அழைப்பு
‘இந்துக்கள் கோயில்களுக்கு மட்டும் சென்றால் போதாது, அனைவரும் சனாதன கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக்கொண்டார்.
மதுரை: ‘இந்துக்கள் கோயில்களுக்கு மட்டும் சென்றால் போதாது, அனைவரும் சனாதன கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக்கொண்டார்.
மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ மஹா பெரியவா கோயிலில் இந்து மக்கள் கட்சி மற்றும் மதுரை அனைத்து பிராமண சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.