முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்: இபிஎஸ்
முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை: முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசும்போது, “முல்லை பெரியார் அணையில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியார் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.