கரையை கடக்கத் தொடங்கியது ஃபெஞ்சல் புயல்: சென்னை வானிலை ஆய்வு மைய அப்டேட்
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு கிழக்கு - வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயலின் வேகம் மணிக்கு 7 கி.மீ ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு கிழக்கு - வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயலின் வேகம் மணிக்கு 7 கி.மீ ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கரையைக் கடந்து முடிக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்மேற்கு வங்கக் கடலில் “ஃபெஞ்சல் புயல்” கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று பகல் 2.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது. இது மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 80 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.