பரந்தூர் போராளியான ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை

ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா(35) திங்கள்கிழமை மாலை திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவர் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 9 முறை ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

பரந்தூர் போராளியான ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை

காஞ்சிபுரம்: ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா (35) திங்கள்கிழமை மாலை திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவர் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 9 முறை ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்த கிராமத்தை மையாக வைத்து 2 ஆண்டுகளாக தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.