இந்தியாவிலேயே தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவு - தமிழக அரசு பெருமிதம் 

வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது. 100 யூனிட்டுக்கு தமிழகத்தில் ரூ.113 மட்டுமே வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவு - தமிழக அரசு பெருமிதம் 

சென்னை: வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது. 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்துக்கு அனைத்து வரிகள் உட்பட மும்பையில் ரூ.643, ராஜஸ்தானில் ரூ.833, மத்திய பிரதேசத்தில் ரூ.618, உத்தரப் பிரதேசத்தில் ரூ.693, பிஹாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.668-ம் வசூலிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் ரூ.113 மட்டுமே வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழகத்தில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.