ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு கட்சியினரின் நிலைப்பாடு வெவ்வேறாக இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தபோது ஆதரவு தான் தெரிவித்து கொண்டிருந்தார்.
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு கட்சியினரின் நிலைப்பாடு வெவ்வேறாக இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தபோது ஆதரவு தான் தெரிவித்து கொண்டிருந்தார்.