ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் ராகிங் புகார்: தேசிய மருத்துவ ஆணையத்திடம் அறிக்கை தாக்கல்
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக முதலாமாண்டு மாணவர் புகார் செய்ததால், கல்லூரி நிர்வாகம் விசாரித்து அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது.
சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக முதலாமாண்டு மாணவர் புகார் செய்ததால், கல்லூரி நிர்வாகம் விசாரித்து அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி, முதலாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர் ஒருவர், பல்கலைக்கழக மானியக் குழுவின் ராகிங் தடுப்புப் பிரிவுக்கு கடந்த 26-ம் தேதி புகார் ஒன்றை இமெயில் மூலம் அனுப்பியிருந்தார். அதில், செயல்முறை பாட கையேடுகளை எழுதித் தருமாறு சீனியர் மாணவர்கள் கட்டாயப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.