கணவரை பிரிவதாக பிரபல ‘பேஸ் கிட்டாரிஸ்ட்’ மோஹினி தே அறிவிப்பு!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் - ஐ பிரிவதாக அறிவித்துள்ளார். 

கணவரை பிரிவதாக பிரபல ‘பேஸ் கிட்டாரிஸ்ட்’ மோஹினி தே அறிவிப்பு!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் (Mark Hartsuch)-ஐ பிரிவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள், ஃபாலோயர்ஸ்களுக்கு நானும் மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு. நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். இருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகள் இருக்கும், பரஸ்பர ஒப்புதலுடன் பிரிந்து செல்வதே சிறந்த வழி என முடிவு செய்துள்ளோம்.