காகித வடிவ முறைக்கு மாற்றாக ‘செயலி’ - ஐபிஎஸ் அல்லாத போலீஸாரின் பணித்திறன் அறிக்கை மின்னணு மயம்

தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அல்லாத போலீஸ் அதிகாரிகளின் பணித் திறன் முதன் முறையாக மின்னணு முறைக்கு மாற்றப் பட்டுள்ளது. இதை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

காகித வடிவ முறைக்கு மாற்றாக ‘செயலி’ - ஐபிஎஸ் அல்லாத போலீஸாரின் பணித்திறன் அறிக்கை மின்னணு மயம்

சென்னை: தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அல்லாத போலீஸ் அதிகாரிகளின் பணித் திறன் முதன் முறையாக மின்னணு முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

தமிழக காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் பணித்திறனுக்கு ஏற்ப வருடாந்திர ரகசிய அறிக்கை அல்லது வருடாந்திர செயல்திறன் மதீப்பீட்டு அறிக்கையானது காகித வடிவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடாந்திர ரகசிய அறிக்கை, காவல் அதிகாரிகள் தங்கள் பணிகாலத்தில் பல்வேறு நிர்வாக செயல்முறைகளான பதவி உயர்வு, அயல்பணி, பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்குவதற்கான பரிந்துரைகள் மற்றும் பணியிடமாறுதல்கள் ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.